Map Graph

தஞ்சை பெரியகோயில் தீவிபத்து

பிரகதீசுவரர் கோயில் தீவிபத்து என்பது தமிழ்நாட்டின் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் 1997 சூன் 7 அன்று நேர்ந்த தீவிபத்தைக் குறிக்கிறது. இந்த நேர்ச்சியானது பெரிய கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஓலைக் கூரையில் பட்ட தீப்பொறியினால் ஏற்பட்டது. இதனால் மொத்தம் 48 பேர் இறந்தனர் மற்றும் 200 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதற்கு காரணமாக கோயிலுக்கு அருகில் ஏற்பட்ட வெப்பவெடிப்பியானது யாகசாலைக்காக அமைக்கப்பட்ட தற்காலிக ஓலைக் கூரை மீது விழுந்ததால் ஏற்பட்டதாக கருதப்படுகிறது. இந்த தீவிபத்தால் ஏற்பட்ட குழப்பத்தால் கோயிலின் கிழக்குத் திசையில் கோயிலின் ஒரே நுழைவாயிலில் நெரிசல் ஏற்பட்டு பலர் மிதிபட்டனர்.

Read article
படிமம்:Temple_tanjore.jpgபடிமம்:Bragadeeshwara_temple_at_Thanjavur.jpg